How is Share Price Calculated? Let’s find out!

Podcast Duration: 7:00
ஷேர் ப்ரைஸ் எவ்வாறு கணக்கிடப்படுகிறது? வாங்க கண்டுப்பிடிக்கலாம்! வணக்கம் நண்பர்களே ஏஞ்சல் புரோக்கிங்கின் இந்த வலையொலிக்கு வரவேற்கிறேன்! நண்பர்களே ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் நாள்தோறும் பில்லியன் கணக்கான ஷேர்கள் டிரேட் செய்யப்படுகின்றன, அவற்றில் அந்த எக்ஸ்சேஞ்சில் லிஸ்ட் ஆகியிருக்கும் ஷேர்கள் அதிக அளவில் டிரேட் செய்யப்படுகிறது. ​ ​இப்படிப்பட்ட ஒரு நாளில் நானும் ஷீக்காவும் எங்கள் நிறுவன பங்கின் விலைகளை கவனித்துக் கொண்டிருந்தோம். கோவிட்க்கு பிறகு பொருளாதாரம் வளர்ச்சி முதல் கட்டத்தில் இருந்த போது - ஞாபகம் இருக்கிறதா அந்த நேரத்தில் டெக் மற்றும் ஃபார்மா நிறுவனங்களின் ஸ்டாக்குகள் கணிசமாக விலை உயர்ந்திருந்தது அல்லவா? நாங்களும் எங்களது சேமிப்பு பணத்தை டெக்னாலஜி செக்டாரின் மியுச்சுவல் ஃபண்ட் -இல் முதலீடு செய்து வைத்திருந்தோம். அதில் ஒரு நிறுவனம் இரண்டே நாட்களில் அதிக லாபத்தை கொடுத்தது. நாங்கள் அந்த ஸ்டாக்கின் விலையை கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தோம், ஏனென்றால் அது இரண்டு நாட்களில் கணிசமாக உயர்ந்து கொண்டே இருந்தது. ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் அந்த ஸ்டாக்கின் விலை மாறிக்கொண்டு இருந்ததை பார்த்த ஷீக்கா இவ்வளவு வேகமாக ஒவ்வொரு நொடியும், இதன் விலை எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்று கேட்டார்? அதன்பிறகு ஒரு ஸ்டாக்கின் விலை எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்று விவரமாக அவரிடம் சொன்னேன் - தொடக்கத்திலிருந்து முடிவு வரை! இப்போது அதைப் பற்றி உங்களிடமும் சொல்லப் போகிறேன்! நிச்சயமாக உங்கள் மனதிலும் இந்த கேள்வி எப்போதாவது கண்டிப்பாக தோன்றியிருக்கும் என்று நினைக்கிறேன். நான் சொல்வது சரி தானே? ​ ​வாருங்கள் ஷேர்களின் விலை எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்று தெரிந்து கொள்வோம். நண்பர்களே ஒரு ஷேரின் விலை எப்போது கணக்கிடப்படுகிறது? அந்தக் கம்பெனி பப்ளிக்காக போகும்போது கணக்கிடப்படுகிறது. அதாவது அந்த நிறுவனத்தின் ஷேர் ஸ்டாக் மார்க்கெட்-இல் டிரேட் செய்ய தொடங்கப்படும்போது. இப்போது நிறுவனத்தின் ஷேர் விலையை முதன்முதலாக கணக்கிடும் போது, முதலில் அந்த நிறுவனத்தின் மதிப்பை கணக்கிட வேண்டும். ​மதிப்பீடு என்பது ஒரு பெரிய வார்த்தையாக தெரியலாம் ஆனால் உண்மையில் அப்படி அல்ல. ​ ​ மதிப்பீடு என்றால் ஒரு நிறுவனத்தின் மதிப்பு ஆகும். ஒரு நிறுவனத்தின் சொத்துக்கள், கடன்கள், வருமானங்கள் மற்றும் ஏற்கனவே உள்ள பேட்டன்ட்ஸ் போன்ற அனைத்து காரணிகளை கொண்டு மதிப்பிடப்படுகிறது. சொத்துக்கள் என்றால் அதில் ரியல் எஸ்டேட், செயலாக்க கருவிகள், ஃபர்னிச்சர், கம்ப்யூட்டர்கள், தயாரிக்கப்பட்ட பொருட்கள் ஆகியவை அடங்கும். கடன்கள் என்றால் அந்த நிறுவனம் மற்றவர்களுக்கு செலுத்த வேண்டிய பணம் மற்றும் நிறுவனம் பெற்றிருக்கும் கடன்கள் அதில் அடங்கும். மதிப்பீடு செய்யப்பட்ட பிறகு நிறுவனம் இஷ்யூவின் அளவை முடிவு செய்வார்கள் - அதாவது IPO -இல் வழங்கப்படும் ஷேர்களின் எண்ணிக்கை. அப்படி மதீப்பிட்டை வகுத்து ஒரு ஷேர்களின் ஆஃபர் விலையை நிர்ணயிப்பார்கள். நண்பர்களே இவ்வாறுதான் முதல் முதலில் ஒரு நிறுவனத்தின் ஷேர் ஸ்டாக் மார்க்கெட்-இல் நுழையும் போது அதன் ஆரம்ப விலை கணக்கிடப்படுகிறது. ​ ​அப்புறம் என்ன? அந்த ஸ்டாக்கின் விலை எவ்வாறு கணக்கிடப்படுகிறது? இங்குதான் கிளாசிக் எகனாமிக் ப்ரின்சிபில் நம் உதவிக்கு வருகிறது. தேவை மற்றும் விநியோகத்தின் குறிக்கோளை பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ​ ​இந்த குறிக்கோளின்படி, ஒரு பொருளின் தேவை மார்க்கெட்டில் அதிகமாகிறது என்றால் - யாரோ ஒருவர் அதை வாங்க முயற்சிக்கிறார் என்று அர்த்தம், அப்போது அதன் விலை அதிகரிக்கும். அதே சமயம் ஒரு பொருளின் தேவை குறைகிறது என்றால் அதன் விலையும் குறையும். ​ ​இந்த குறிக்கோளின்படி தான், ஸ்டாக் மார்க்கெட்-இல் ஒரு ஷேரின் விலை மாற்றங்களை சந்திக்கிறது. சரி, ஸ்டாக் எக்ஸ்ச்சேன்ச் -கள் தேவை மற்றும் விநியோகத்தை எவ்வாறு துள்ளியமாக கணக்கிடுகிறது? ​ ​இதற்கான பதில், அவர்களுக்கு ஒவ்வொரு நிமிடமும் கிடைக்கும் வாங்குதல் மற்றும் விற்பனை ஆர்டர் மூலம். ஆம், ஒவ்வொரு ஸ்டாக் எக்ஸ்ச்சேன்ச்-இல் ஆயிரக்கணக்கான வாங்குதல் மற்றும் விற்பனை ஆர்டர்கள் போஸ்ட் செய்யப்படுகிறது. நீங்கள் ஏதாவது ஒரு ஷேரின் ஆஸ்க் மற்றும் பிட் இன் கிராஃப் -ஐ பார்க்க நேர்ந்தால் ஸ்டாக் மார்க்கெட் -இல் அடிப்படை தேவை மற்றும் விநியோகத்தை சமன்படுதும் வேலையை செய்கிறது என்று உங்களுக்கு புரியும். இந்த முறையில் தொடர்ந்து ஒரு ஷேரின் விலை வாங்குதல் மற்றும் விற்பனை ஆர்டர்களின் அடிப்படையில் அதன் தேவைக்கு ஏற்ப கணக்கிடப்படுகிறது. உண்மையில் மார்க்கெட் திறந்து மூடும் வரை இதுதான் ஒரு ஸ்டாக்கின் விலையை ஏற்றி இறக்குகிறது. ​ ​இதைத் தவிர இரண்டாம் தரப்பு காரணிகளும் ஒரு ஸ்டாக்கின் விலையை பாதிக்கும். ஆனால் இந்த காரணிகள் தேவை மற்றும் விநியோகத்தை பாதிக்கிறது. உதாரணமாக ஒரு நிறுவனத்தின் சொத்து வெள்ளம் அல்லது புயல் போன்ற இயற்கை சீற்றங்களினால் பாதிக்கப்பட்டால், அந்த நிறுவனம் நஷ்டம் அடைகிறது. அப்போது மக்கள் அந்த ஷேர்களை விற்க தொடங்குகிறார்கள். ​திடீரென்று அந்த ஸ்டாக்கின் தேவை குறைவதால் மற்றும் அதன் விநியோகம் அதிகரிப்பதால் அதன் விலை குறைகிறது. அதே மாதிரி ஒரு நிறுவனத்தின் ஆண்டு அறிக்கையில் அந்த நிறுவனம் நன்றாக செயல்பட்டிருப்பது தெரிய வந்தால், மக்கள் அதை நிறைய வாங்க ஆரம்பிப்பார்கள் - அப்போது அதன் விலை அதிகமாகிறது. ஆனால் இந்த காரணிகள் ஸ்டாக்கின் விலை கணக்கிடப்படுவதை வழக்கமாக பாதிக்காது. ஆனால் வேறு ஒரு விஷயம் கண்டிப்பாக அதை பாதிக்கும். அதாவது ஒரு நிறுவனம் ஸ்டாக் ஸ்பிளிட் செய்தால், ஒரு ஸ்டாக்கை இரண்டு, மூன்று, ஐந்து அல்லது ஏன் இருபது அல்லது முப்பது என்று கூட ஸ்ப்ளிட் செய்ய முடியும். இந்த முறையில் முதலீட்டாளர்கள் வைத்திருக்கும் ஸ்டாக்கின் மதிப்பு மாறது ஆனால், அதன் எண்ணிக்கை ஸ்ப்ளிட் ரேசியோவால் பெருக்கப்படும். அதாவது ஸ்டாக்கின் விலை ஸ்ப்ளிட் ரேசியோவால் வகுக்கப்படும் - அதாவது ஒரு ஸ்டாக் இரண்டு என்று ஆக்கப்பட்டால் அதன் விலை பாதியாகி விடும். அதை போலவே, ஒரு ஸ்டாக் பத்தாக பிரிக்கப்பட்டால் அதன் விலை பத்து மடங்கு குறைந்து விடும். ஒரு ஸ்டாக்கின் விலை எப்படி கணக்கிடப்படுகிறது என்பது சுலபமாக புரிதிறது தானே? ஆனால் தொடர்ந்து ஒரு ஸ்டாக்கின் விலையை மாற்றி அமைக்கும் சிஸ்டம் மிகவும் குழப்பமானது. அந்த சிஸ்டம் உயர் அதிர்வெண்ணில் ஆர்டர்களுக்கு ஏற்ப ஸ்கேன் செய்து மேட்ச் செய்யப்படும். ஒரு மார்க்கெட் திறக்கப்படும்போது, திரைக்கு பின்னால் இது தான் நடக்கிறது! இது சுவராசியமான கருத்துதானே? ஸ்டாக் மார்க்கெட் கருத்துகளைபற்றி மேலும் சுவாரசியமான விசயங்களை தெரிந்துகொள்ள வேண்டுமா? எங்கள் வலையொலியை கேளுங்கள் அல்லது இலவசமாக தெரிந்துகொள்வதற்கு எங்கள் வலைதளத்தை பார்வையிடுங்கள் - www.angelone.in. மீண்டும் சந்திக்கும் வரை ஏஞ்சல் புரோக்கிங் உங்களிடம் இருந்து விடை பெறுகிறது, மகிழ்ச்சியாக கற்றுக்கொள்ளுங்கள். ​ ​முதலீடுகள் மற்றும் செக்கியூரிட்டிஸ் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. முதலீடு செய்வதற்கு முன் தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் கவனமாகப் படியுங்கள். ​